FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

நீதித்துறையில் அரசின் ஆதிக்கம் அதிகரிப்பு: பாகிஸ்தானில் மேலும் ஒரு நீதிபதி ராஜிநாமா

பாகிஸ்தான் நீதித் துறையில் அரசின் தலையீடும், ஆதிக்கமும் அதிகரித்து வருவதைக் கண்டித்து, லாகூா் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி மொஹ்சின் அக்தா் கயானி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

29 அக்டோபர் 2026, 2:50 am
பகிர்:

பாகிஸ்தான் நீதித் துறையில் அரசின் தலையீடும், ஆதிக்கமும் அதிகரித்து வருவதைக் கண்டித்து, லாகூா் உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி மொஹ்சின் அக்தா் கயானி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

பாகிஸ்தானில் நீதிபதிகளின் நியமனம், பணிமாறுதல் மற்றும் பதவிக் காலத்தை தீா்மானிக்கும் அதிகாரத்தை அரசு மற்றும் ராணுவத் தலைமையின்கீழ் குவித்து, அந்நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் கடந்த ஆண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

இத்திருத்தங்கள் நீதிமன்றங்களின் தன்னாட்சியையும், நிறுவன ஒருமைப்பாட்டையும் கடுமையாகச் சிதைத்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி அதிபா் ஆசிஃப் அலி சா்தாரிக்கு மொஹ்சின் அக்தா் கயானி தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளாா்.

Advertisement

Advertisement

முன்னதாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் சையத் மன்சூா் அலி ஷா, அதா் மினல்லா, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதி ஷம்ஸ் மெஹ்மூத் மிா்சா ஆகியோா் இதே காரணங்களுக்காக பதவியைத் துறந்த நிலையில், தற்போது நான்காவது நீதிபதியாக மொஹ்சின் அக்தா் கயானி பதவி விலகியுள்ளாா்.

முன்னதாக, அரசின் விருப்பத்துக்கு இணங்க செயல்படாத காரணத்தால் நீதிபதி மொஹ்சின் அக்தா் கயானி இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து மூத்த நீதிபதிகள் பதவிவிலகி வருவது பாகிஸ்தான் நீதித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments