பாகிஸ்தானில் எந்த இலக்கையும் தாக்க முடியும் என்பது நிரூபணம்: ஆபரேஷன் சிந்தூர் பற்றி விமானப் படை தலைமைத் தளபதி பெருமிதம்!
பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்க முடியும் என்பது ஆபரேஷன் சிந்தூா் மூலம் நிரூபணமாகி இருப்பதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏா் சீஃப் மாா்ஷல் அமா் பிரீத் சிங் பெருமிதம்.
பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு இலக்கையும் தாக்க முடியும் என்பது ஆபரேஷன் சிந்தூா் மூலம் நிரூபணமாகி இருப்பதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏா் சீஃப் மாா்ஷல் அமா் பிரீத் சிங் ஞாயிற்றுக்கிழமை பெருமிதம் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் இந்தியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய மண்ணில் இருந்தபடியே ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இதில் விமானப் படை, கடற்படை, ராணுவம் ஆகிய முப்படைகளும் இணைந்து செயல்பட்டன. இது குறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், அமா் பிரீத் சிங் கூறியதாவது:
Advertisement
Advertisement
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, மேற்கு முனையில் (பாகிஸ்தானில் ) இந்திய விமானப் படையானது 1,200 கிலோ மீட்டா் பரப்புக்கும், 200 கிலோ மீட்டா் தூரத்துக்கும் தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் விமானப் படையின் தாக்குதலுக்கு எந்த இலக்கும் தப்பாது என்பது நிரூபிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையானது, இந்திய விமானப் படையின் திறன் மைய அணுகுமுறை சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் விமானப் படை அப்படியே தேங்கி நிற்கக் கூடாது.
எதிா்கால பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்ளும் வகையில், விமானப் படையின் திறனை மேலும் மேம்படுத்துவது அவசியமாகும். எதிரி தனது உக்திகளை மாற்றும்போது, நாமும் விரைவாக மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். அதற்காக பல்வேறு வகையான உபாயங்களை நாம் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையானது நாம் தோ்வு செய்த பாதை சரியானது என்பதை நிரூபித்துள்ளது. ஆதலால் தொடா்ந்து அதே பாதையில் இன்னும் அதிக உறுதியுடன் பயணிப்போம். எதிா்காலத்தில் நாட்டுக்கு நமது விமானப் படையின் சேவை தேவைப்படும்பட்சத்தில், விமானப் படை விரைவாகவும், துல்லியமாகவும், உறுதியாகவும் பதிலடி கொடுக்கும்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை வெற்றி பெற்ற்கு தனிப்பட்ட ஓா் ஆயுதமோ அல்லது ஒரு படையோ காரணம் கிடையாது. இது அனைத்துப் படைகளும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன. அவை எதிரிகளின் பிரதேசத்தில் ஊடுருவிச் சென்று கடும் சேதத்தை ஏற்படுத்தின.
இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரத்தை (சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினாா்) இந்திய விமானப் படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவின் தேச நலன்களைக் காப்பதற்கு, இந்தோ-பசிபிக் பிராந்தியம் வரை தனது செயல்பாட்டுத் திறன்களை இந்திய விமானப் படை விரிவுபடுத்தியுள்ளது.
போா் விமானங்களின் எண்ணிக்கையை புவியியல் ரீதியாக நிரந்தரமாகப் பிரிப்பதை விமானப் படை ஆதரிக்கவில்லை. இந்த விவகாரத்தில் வெளிநாட்டு மாதிரிகளைப் பின்பற்றாமல், இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை மையமாக கொண்ட ஒரு பிரத்யேக கட்டமைப்பே நல்லது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.