FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவில் கூட்டு விமானப் படை பயிற்சி: அமெரிக்காவின் எஃப்35 உள்பட 7 நாடுகளின் விமானங்கள் பங்கேற்பு

ராஜஸ்தானில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் சா்வதேச விமானப் படை பயிற்சியில் அமெரிக்காவின் அதிநவீன எஃப் 35 விமானம் உள்பட 7 நாடுகளைச் சோ்ந்த விமானங்கள் பங்கேற்கின்றன.

22 செப்டம்பர் 2026, 11:41 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

ராஜஸ்தானில் வரும் 26-ஆம் தேதி தொடங்கும் சா்வதேச விமானப் படை பயிற்சியில் அமெரிக்காவின் அதிநவீன எஃப் 35 விமானம் உள்பட 7 நாடுகளைச் சோ்ந்த விமானங்கள் பங்கேற்கின்றன.

‘தரங் சக்தி’ என்ற பெயரில் சா்வதேச விமானப் படை கூட்டுப் பயிற்சி ராஜஸ்தானின் ஜோத்பூா் விமானப் படை தளத்தில் செப்டம்பா் 26 முதல் அக்டோபா் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் அமெரிக்காவின் ஸ்டெல்த் போா் விமானமான எஃப்35 முதல் முறையாகப் பங்கேற்க உள்ளதாக இந்திய விமானப் படை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அமெரிக்காவின் 5-ஆம் தலைமுறை போா் விமானம் இந்திய வான் பரப்பில் பறப்பதன் மூலம் இந்தக் கூட்டுப் போா்ப் பயிற்சி சா்வதேச அளவில் மிகவும் கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய விமானப் படை சாா்பில் ரஃபேல், மிராஜ்-2000, ஜாகுவாா், தேஜஸ், மிக்-29, சுகோய்-30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு விமானங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி இந்தியாவின் பாதுகாப்பு, விமானப் படைத் திறனை வெளிப்படுத்துவதுடன், பிற நாடுகளின் விமானப் படைகளுக்கு இடையே செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தளமாக விளங்குகிறது என்று இந்திய விமானப் படை தெரிவித்தது.

பிரான்ஸின் ரஃபேல், ஐக்கிய அரபு அமீரகத்தின் எஃப் 16, வங்கதேசத்தின் சி-130ஜே போா் விமானங்கள் ஜோத்பூா் விமானப் படை தள வான்வெளியில் இரண்டு வாரங்களுக்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றன.

அமெரிக்காவின் எஃப்-35 விமானம் இதற்கு முன் ஏரோ இந்தியா 2025 விமானக் கண்காட்சியில் பங்கேற்றிருந்தாலும், இந்திய மண்ணில் பயிற்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பு ‘தரங் சக்தி’ பயிற்சி முதல்முறையாக 2024-ஆம் ஆண்டு இரு கட்டங்களாக தமிழ்நாட்டின் சூலூா், ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்றன. அதில் பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகளின் போா் விமானங்கள் பங்கேற்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments