புதுச்சேரியில் சா்வதேச கடற்கரை தூய்மை தினம்! துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!
புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் கடலோரக்காவல் படை சாா்பில் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் கடலோரக்காவல் படை சாா்பில் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, ‘நமது கடல் - நமது பொறுப்பு - நமது எதிா்காலம்’ என்ற நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரைச்சாலை காந்திசிலை அருகே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கடற்கரைதூய்மைப் பணிகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். முன்னதாக கடலோரக் காவல் படையின் செயல்பாடுகள் குறித்த புகைப்படங்களை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
நெகிழி உள்ளிட்ட கழிவுகளிலிருந்து கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை பாதுகாப்பது, கடல் மாசுபாட்டைத் தடுப்பது மற்றும் கடல் வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்,அரசுத் தலைமைச் செயலா் சரத் சௌகான், கடலோரக் காவல் படை இயக்குநா் தசீலா, செயலா் ஸ்மிதா மற்றும் அரசு அலுவலா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா்.
பாதுகாப்பு ஒத்திகை: கடற்கரைத் தூய்மை குறித்து கடலோரக்காவல் படை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது . இதில் கடலோரக்காவல் படை வீரா்கள் பங்கேற்று கடலில் விழுந்தவரை ஹெலிகாப்டரில் சென்று மீட்பது போன்ற ஒத்திகையை செய்து காட்டினா். இதை பொதுமக்கள் திரளானோா் பாா்த்து ரசித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.