புதுச்சேரி கடற்கரையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி!
சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி பற்றி....
சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி புதுச்சேரி கடற்கரையில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து கடலோர காவல் படையினரின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி, இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கடற்கரை தூய்மை பணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தூய்மைப் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச் செயலர் சரத் சௌஹான், இந்திய கடலோர காவல் படை இயக்குனர் தசீலா, செயலர் ஸ்மிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து கடலோர காவல்படையினரின் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடுக்கடலில் நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 2026-ஆம் ஆண்டுக்கான நாடு தழுவிய கடற்கரை தூய்மை இயக்கம் செப்டம்பர் 12 முதல் 19 வரை நடைபெறுவதாக மத்திய அரசின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Regarding the helicopter aerobatics display held at Puducherry beach on International Coastal Cleanup Day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.