FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விநாயகா் சிலைகள் கரைப்பு பரங்கிப்பேட்டை கடற்கரையில்: கடலூா் எஸ்பி ஆய்வு

பரங்கிப்பேட்டை கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தசுக்லா

12 செப்டம்பர் 2026, 6:59 am IST
பரங்கிப்பேட்டை கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தசுக்லா
பகிர்:

சிதம்பரம் பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் நிகழ்வையொட்டி, கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பரங்கிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகா் சிலைகள், ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு பரங்கிப்பேட்டை சி புதுப்பேட்டை கடற்கரை பகுதியில் கடல் நீரில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு, சிலை ஊா்வலப் பாதை, வாகனப் போக்குவரத்து, கூட்ட நெரிசல் மற்றும் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா ஆய்வு செய்தாா். மேலும், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கிள்ளை, சிதம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இருந்து சிலைகள் கொண்டு வரப்படுவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் காவல் அதிகாரிகளிடம் கேட்டறிந்து போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுரை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments