நாடு கடத்துதல், எல்லைச் சுவர் அமைத்தல்! வெள்ளை மாளிகை வெளியிட்ட விடியோ கேம்கள்!
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிரம்ப் அரசின் கொள்கைகள் விடியோ கேம்கள் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிரம்ப் அரசின் கொள்கைகள் விடியோ கேம்கள் வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 விடியோ கேம்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், டிரம்ப் அரசின் கொள்கைகளான நாடு கடத்துதல், எல்லைச் சுவர் எழுப்புதல் போன்றவை விடியோ கேம்கள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளன.
முறையான ஆவணங்களின்றி புலம்பெயர்ந்த மக்களை பெரிய அளவில் கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், இதுபோன்ற ஆர்கேட் வடிவ விடியோ கேம்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது மனித உரிமைகள் அமைப்புகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Advertisement
Advertisement
பிரபலமான ஸ்னேக் கேமின் சாயலைக் கொண்ட ரியோ ரன் எனப் பெயரிடப்பட்ட ஒரு கேமில் மெக்சிகோ எல்லையில் உள்ள ரியோ கிராண்டே நதிக்கரையில், அமெரிக்க எல்லை அதிகாரி டாம் ஹோமன் டிஜிட்டல் வடிவத்தில் வெவ்வேறு நிறத் தோல் கொண்ட புலம்பெயர்ந்தோரைத் துரத்துவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெட்ரிஸ் எனப்படும் கட்டட வடிவமைப்பு சார்ந்த ’பில்ட் தி வால்’ (கட்டடம் எழுப்புதல்) என்ற மற்றொரு கேமில், வரவிருக்கும் கூட்டத்திடம் இருந்து நமது எல்லையைப் பாதுகாக்கவும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டு எல்லைச் சுவர் எழுப்புவதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அக்கவுன்ட்ஸ் என்ற கேமில், 2025 முதல் 2028 வரை பிறக்கும் குழந்தைகளுக்காக $1,000 வைப்புத்தொகையை வங்கி கணக்குகளில் முதலீடு செய்வதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், ’மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ (அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவோம்) என்ற வாசகத்துடன் இந்த விடியோ கேம்களுக்கான இணையதளப் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனுடன், ”வெற்றி பெறுவதை நிறுத்த முடியாது. நாடு கடத்துங்கள். சுவர் எழுப்புங்கள். டிரம்ப் கணக்கில் பணத்தை நிரப்புங்கள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
”புதுமைகளை வரவேற்று, டிரம்ப் அரசின் சாதனைகளை ஒவ்வொரு அமெரிக்கரிடமும் கொண்டு சேர்ப்பதில் இந்த நிர்வாகம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது” என்று வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு கடத்தப்படுவதற்காக முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்கள் பலரும் இறந்துகொண்டிருக்கும் வேளையில், வெள்ளை மாளிகை அவர்களைக் கேலிப் பொருளாகச் சித்திரிப்பது மனிதத் தன்மையற்ற செயல் என அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் இந்த விடியோ கேம்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட கேம்கள் https://www.whitehouse.gov/arcade/ என்கிற இணையதளப் பக்கத்தில் உள்ளன.
The Trump administration's policies have been released in the form of video games on the White House's official website.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.