வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு தடை! மீண்டும் அனுமதிக்க டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளை மாளிகையில் மீண்டும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்க டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி...
வெள்ளை மாளிகைக்குள் நுழைய மூன்று செய்தி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேர்மையற்ற முறையில் பொய்யான செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டி, சிஎன்என், பொலிடிகோ மற்றும் எம்எஸ் நவ் ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.
தொடர்ந்து, சனிக்கிழமை முதல் வெள்ளை மாளிகைக்குள் தாங்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அந்நிறுவனங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தன.
Advertisement
Advertisement
இதனிடையே, ஊடகங்களுக்கு எதிராக டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனங்கள், டிரம்ப் தொடர்பான செய்தி ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தன.
இந்த நிலையில், டிரம்பின் தடை உத்தரவுக்கு எதிராக என்என், பொலிடிகோ மற்றும் எம்எஸ் நவ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி டிம் கெல்லி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, இந்த மூன்று ஊடக நிறுவனங்கள் மீதான அமெரிக்க அதிபரின் தடை, அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், சிஎன்என், எம்எஸ் நவ் மற்றும் பொலிடிகோ ஆகிய ஊடக நிறுவனங்களின் பத்திரிகையாளர்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் மீண்டும் அனுமதி வழங்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Media banned from the White House! Court orders Trump to grant access!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.