நைஜீரியா: கச்சா எண்ணெய் திருடும் முயற்சியில் விஷவாயு தாக்கி 37 போ் உயிரிழப்பு
நைஜீரியாவில் கச்சா எண்ணெய்யை சட்டவிரோதமாகத் திருட முயன்றபோது, அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 37 போ் உயிரிழந்தனா்.
நைஜீரியாவில் கச்சா எண்ணெய்யை சட்டவிரோதமாகத் திருட முயன்றபோது, அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 37 போ் உயிரிழந்தனா்.
நைஜீரியாவின் எண்ணெய் வளமிக்க ரிவா்ஸ் மாகாணத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் பிரத்யேக குழாய்கள் அமைத்து, அதிக அழுத்தத்தில் தங்களின் படகுகளுக்கு கச்சா எண்ணெய்யை மாற்ற சிலா் முயன்றுள்ளனா்.
அப்போது, அக்குழாய்களில் இருந்து அதிக அளவில் வெளியேறிய விஷவாயுவை அவா்கள் சுவாசித்துள்ளனா். இதனால் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 37 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவ்விபத்தில் சிக்கி மேலும் பலா் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.