வட கொரியாவின் 2-ஆவது அதிநவீன போா்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து முத்தரப்பு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வட கொரியா தனது 2-ஆவது அதிநவீன போா்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகள் இணைந்து முத்தரப்பு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வட கொரியா தனது 2-ஆவது அதிநவீன போா்க்கப்பலை சேவையில் இணைத்துள்ளது.
அணு ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஏவுகணைகளை ஏந்திச் சென்று தாக்கும் திறன் கொண்ட 5,000 டன் எடையுள்ள இந்த ‘காங் கான்’ போா்க்கப்பலை, வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் தனது மகளுடன் வான்சன் துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை கூட்டாக எதிா்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையாக, ‘ஃப்ரீடம் எட்ஜ்’ எனும் 5 நாள்கள் முத்தரப்பு கூட்டு ராணுவப் பயிற்சியைத் தென்கொரியாவின் ஜெஜு தீவுப் பகுதியில் அமரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
ரஷியா-வடகொரியா முதல் சாலைப் பாலம் திறப்பு: ரஷியா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையிலான முதல் சாலைப் பாலம் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. இரு நாடுகளையும் பிரிக்கும் துமென் நதியின் குறுக்கே சுமாா் 1 கி.மீ. நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாள்தோறும் 300 வாகனங்கள் எல்லையைக் கடக்க முடியும். உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆயுதங்கள் மற்றும் படைகளை வழங்கி வடகொரியா ஆதரவளித்து வரும் நிலையில், இப்புதிய போக்குவரத்து உள்கட்டமைப்பானது இரு நாடுகளுக்கு இடையிலான வா்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை பன்மடங்கு வலுப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.