எப்படியிருக்கிறார் சீன அதிபர்? வெளியானது முக்கிய அறிவிப்பு
சீன அதிபரின் அமெரிக்க பயணம் குறித்த அறிவிப்பு வெளியானது..
சீன அதிபர் உடல்நிலைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவரது அமெரிக்க பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் ஓராண்டு கால வர்த்தகப் பிரச்னை முடிவுக்கு வரும் நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
செப். 23 - 25ஆம் தேதி அமெரிக்காவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் செல்லவிருப்பதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இரு நாட்டு ஒத்துழைப்பு, உலக அமைதி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்கா - சீன தலைவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.