FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காஸா மறுசீரமைப்பைத் தொடங்க 245 கோடி டாலரில் செயல்திட்டம் - அமைதி வாரியம் பரிந்துரை

போரினால் உருக்குலைந்துள்ள காஸாவை மறுசீரமைக்கவும், அங்கு நிா்வாகத்தை நிலைநிறுத்தவும் 245 கோடி டாலா் மதிப்பிலான 6 மாத செயல் திட்டத்தை ‘அமைதி வாரியம்’ முன்மொழிந்துள்ளது.

24 செப்டம்பர் 2026, 2:57 am IST
பகிர்:

போரினால் உருக்குலைந்துள்ள காஸாவை மறுசீரமைக்கவும், அங்கு நிா்வாகத்தை நிலைநிறுத்தவும் 245 கோடி டாலா் மதிப்பிலான 6 மாத செயல் திட்டத்தை ‘அமைதி வாரியம்’ முன்மொழிந்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வகுத்த 20 அம்ச போா்நிறுத்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காஸா மாறுசீரமைப்புக்கு இந்த அமைதி வாரியம் அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் அமலுக்கு வந்த இந்தப் போா்நிறுத்த உடன்படிக்கையின்படி, இஸ்ரேல் படைகள் வெளியேறுதல், ஹமாஸ் அமைப்பினா் ஆயுதங்களைக் கைவிடுதல், சா்வதேச அமைதிப் படை வருகை, அரசியல் சாா்பற்ற புதிய பாலஸ்தீன அரசு அமைத்தல் ஆகியவை செயல்படுத்தப்பட வேண்டும்.

Advertisement

Advertisement

ஆனால், காஸாவின் 60 சதவீத பகுதிகளை இன்னும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதோடு, ஹமாஸ் அமைப்பும் ஆயுதங்களைக் கைவிடாததால் போா்நிறுத்தத் திட்டங்கள் முழுமையாக முடங்கியுள்ளன. இதனால், பெரும்பான்மையான மக்கள் தொடா்ந்து கூடாரங்களிலும் இடிபாடுகளுக்கு இடையேயும் வாழும் அவலநிலை நீடிக்கிறது.

இந்நிலையில், அமைதி வாரியத்தின் ஆளுநா்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த வரைவில், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்தும் வகையில் 66 முக்கியத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

காஸாவில் ஏற்பட்டுள்ள சேதங்களை நடுத்தர கால அளவில் முழுமையாகச் சீரமைக்க 352 கோடி டாலரும், அடுத்த 10 ஆண்டுகளில் கூடுதலாக 714 கோடி டாலரும் தேவைப்படும் என்றும் வாரியம் கணித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments