FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

எல்லையில் ஊடுருவ முயன்ற தலிபான்கள் சுட்டுக் கொலை: பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற ஆப்கானிஸ்தான் தலிபான் படையினா் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலா் கொல்லப்பட்டனா்.

26 செப்டம்பர் 2026, 3:32 am IST
பகிர்:

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாண எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற ஆப்கானிஸ்தான் தலிபான் படையினா் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலா் கொல்லப்பட்டனா்.

பலூசிஸ்தானின் குலிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான் படையினா் வியாழக்கிழமை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும், இதற்குப் பாதுகாப்புப் படையினா் உடனடியாகப் பதிலடி கொடுத்ததாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நள்ளிரவைத் தாண்டியும் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்த நிலையில், எல்லைப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments