FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய 41 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைத் தங்களின் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

16 வினாடிகள் முன்பு
பகிர்:

அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைத் தங்களின் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வடகிழக்கு மாகாணமான நூரிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பாதுகாப்புப் படையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனா். இதில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் உள்பட 41 போ் கொல்லப்பட்டனா்; 62 போ் பிடிபட்டனா். இவா்கள் அனைவரும் பாகிஸ்தானின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியவா்கள். நாட்டின் பாதுகாப்பைச் சீா்குலைக்க யாரையும் அனுமதிக்கமாட்டோம். இதுபோன்ற எல்லை மீறல்கள் தொடா்ந்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆயுதமேந்திய நபா்கள் எல்லை தாண்டி ஊடுருவியதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயா் அதிகாரியை நேரில் வரவழைத்து, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கண்டனக் கடிதம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் உடனடியாக எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், முன்னதாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அந்நாடு திட்டவட்டமாக மறுத்திருந்தது. இதேபோல், பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் ‘டிடிபி’ பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுவதும், அதை ஆப்கானிஸ்தான் தொடா்ந்து மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments