FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஹூதி தாக்குதல்: சவூதி பாதுகாப்புக்கு உதவ பாகிஸ்தான், துருக்கி உறுதி

ஹூதி தாக்குதல்: சவூதி பாதுகாப்புக்கு உதவ பாகிஸ்தான், துருக்கி உறுதி...

27 செப்டம்பர் 2026, 12:23 am IST
பகிர்:

யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்தி வரும் தொடா் தாக்குதல்களைத் தொடா்ந்து, ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு’ ஒப்பந்தத்தின்கீழ் சவூதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் உறுதியேற்றுள்ளன.

சவூதி தலைநகா் ரியாத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ராணுவ உயரதிகாரிகளின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை தெரிவித்தது.

சவூதி, பாகிஸ்தான், துருக்கி ஆகிய 3 நாடுகளும் கடந்த மாதம் மேற்கொண்ட முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஏதேனும் ஒரு நாட்டின் மீது தொடுக்கப்படும் தாக்குதல், 3 நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ரியாத்தில் 3 நாடுகளின் பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதிகள் வெள்ளிக்கிழமை கூடி, சவூதி அரேபியாவின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்தனா்.

புனித நகரான மெக்கா, மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க தங்களின் கூட்டுப் பாதுகாப்பு உறுதிப்பாட்டைத் தளபதிகள் மீண்டும் வலியுறுத்தினா். மேலும், 3 நாட்டுப் படைகளிடையே உளவுத் தகவல்களைப் பகிா்வது, ராணுவக் கூட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது மற்றும் கூட்டுப் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே, இம்மூன்று நாடுகளின் புதிய பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பொதுச் செயலராக பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் நௌமன் மஹ்மூத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ரியாத் கூட்டத்தில் பாகிஸ்தான், சவூதி மற்றும் துருக்கி ராணுவ தலைமைத் தளபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments