துருக்கி, இந்தோனேசியா, கத்தார் உடன் கைகோக்கும் பாகிஸ்தான்! புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்!
துருக்கி, இந்தோனேசியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் இடையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து...
துருக்கி, இந்தோனேசியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி, இந்தோனேசியா, கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தங்களின் பாதுகாப்பு தளவாடங்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இன்று (அக். 21) புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
பத்ர் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப், துருக்கி பாதுகாப்பு அமைச்சர் யாசர் குலெர், கத்தார் துணைப் பிரதமர் ஷேக் சௌத் பின் அப்துல் ரஹ்மான் மற்றும் இந்தோனேசியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் யூசுப் ஜௌஹாரி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
தொடக்கால இஸ்லாமியர்களுக்கும், அவர்களின் எதிராளிகளுக்கும் இடையேயான முதல் ராணுவ மோதல் நடைபெற்ற “பத்ர்” (தற்போதைய சௌதி அரேபியாவில் உள்ள இடம்) எனும் இடத்தின் பெயர் இந்த ஒப்பந்தத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் நிகழ்வு குறித்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.
ஏற்கெனவே, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
A new defence agreement has been signed between Turkey, Indonesia, Qatar and Pakistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.