மேஷம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

மேஷம் (ARIES)

இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும்கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா! இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான்.

டிசம்பர் 2

இன்று கடன் பிரச்சனைகள் குறையும். புதிய எண்ணங்கள் உண்டாகும். புது நபர்களின் நட்பும் கிடைக்கலாம். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். செல்வம் சேரும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

டிசம்பர் 1 - 7

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எந்தச் செயலைச் செய்தாலும் வெற்றி காண்பீர்கள். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.  சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களின் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் பொருள்களை நல்ல விலைக்கு விற்பீர்கள்.

விவசாயிகள் உப தொழில்களால் லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் உள்கட்சிப் பிரச்னைகளில் விலகி விடுவீர்கள். கலைத் துறையினரின் பழைய பாக்கி வசூலாகும்.

பெண்களுக்கு கணவருடன் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

டிசம்பர் மாத பலன்கள்

(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில்  குரு (வ) -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் கேது -  களத்திர  ஸ்தானத்தில் சுக்ரன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில் புதன் -  தொழில்  ஸ்தானத்தில் சனி -  அயன சயன போக  ஸ்தானத்தில் ராஹூ  என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

02-12-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

16-12-2023 அன்று சூர்ய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

20-12-2023 அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

25-12-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

27-12-2023 அன்று செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருத்துவம் சார்ந்த செலவுகள் குறையும். அடுத்தவர்களுக்கு உதவும் முன் யோசித்து செயல்படுங்கள். மூன்றாம் மனிதர்களின் தலையீட்டால் பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் நீங்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிட்டும்.  மேலதிகாரிகளிடம் உங்களது மீதான நல்ல எண்ணங்கள் மேலோங்கும். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம்.

பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை.

அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

அஸ்வினி:

இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பரணி:

இந்த மாதம் வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

கார்த்திகை:

இந்த மாதம் குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 11, 12, 13

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 6, 31

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் 2023

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

உங்களுக்கு இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.

தொழிலில் மேன்மை உண்டாகும். தனலாபம் உயரவும் வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணிசமான லாபம் பெற இயலும். மகசூல், கொடுக்கல் - வாங்கல் போன்றவற்றில் குறை உண்டாகாது. அதிகச் செலவுக்கு இடமுண்டு. ஆனால் அதனை சாமர்த்தியமாக சமாளிக்க வழி உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு, ஒரு முக்கியப் பிரச்சினையில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டம் உருவாகலாம். அரசாங்க காரியங்களில் எந்த ஆதாயத்தையும் முயற்சி செய்து பெறலாம். 

கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் செவ்வனே நிறைவேறத்தடையில்லை. பொதுவாக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சம் நன்றாக இருக்கும். 

பெண்களுக்கு உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமைய இந்த காலகட்டம் உதவும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க இடமுண்டு. 

மாணவர்கள் புகழுடன் பொருளும் பெறுவர்.  வித்தைகளில் தேர்ச்சி உண்டாகும். தொலைதூரச் செய்தி நற்செய்தியாக இருக்கும்.

அஸ்வினி:

இந்த ஆண்டு தகுதிவாய்ந்தவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் பணி சரிவர இருந்து வரும். அன்றாட காரியங்கள் செவ்வனே நடைபெறும். கற்றறிந்த மேலோருக்குக் குறை ஏதும் உண்டாகாது. உங்களுடைய உயர்ந்த குணத்தால் அந்தஸ்து சிறப்பாக அமையும். தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு. பெரியோர் நல்லாசியை விரும்பிப்பெறுங்கள். சத்ருவினால் ஓரிரு சங்கடங்கள் உருவாகலாம். உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம். 

பரணி:

இந்த ஆண்டு வியபாரிகளுக்கு அளவான லாபம் நிச்சயம் உண்டு. பொருளாதார சுபிட்சம் குறைவுபடாது. பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை குறித்து சற்று மனத்தாங்கல் ஏற்படலாம். எனினும் அது தானாகவே சரியாகிவிடும். எந்தவிதமான குறுக்கு வழியிலும் நிலைமையைச் சமாளிக்க முயலாதீர்கள். பெரியோர் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம். அன்றாடப் பிரச்சினைகள் தடங்கலின்றி நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பணக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம். 

கிருத்திகை 1ம் பாதம்:

இந்த ஆண்டு சங்கடங்கள் சற்றுமட்டுப்பட வாய்ப்புண்டு. பொருளாதார சுபிட்சம் பாதிக்கப்படாது. அன்றாட வாழ்வு நலமுடன் நிகழத்தடையிருக்காது. தொழிலிலோ, வியாபாரத்திலோ புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகளுக்குப் ஏதேனும் வில்லங்கம் ஏற்படலாம். கவனமுடன் இருப்பது அவசியம். உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் மிக்கப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. இல்லையேல் பழிச்சொல் வர நேரலாம். பெரியோர் சகவாசத்தை விரும்பிப்பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டுவாருங்கள். தொல்லை குறையும். 

பரிகாரம்:

முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

உங்களுக்கு இந்த் ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும். பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம். திடீர்ப் பொருள் வரவுக்கு   வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு.  பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்துவரும். திடீர்ப் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர்ச் செலவுக்கும் இடமுண்டு. 

வியாபாரிகளுக்கு அலைச்சல் தவிர்க்க முடியாமற் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.

அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது. 

பெண்கள் 'தானுண்டு, தன் வேலை உண்டு' என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச் சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம். 
மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெறத் தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும். 

கிருத்திகை 2, 3, 4 ம்பாதங்கள்: 

இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி-தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம்.  கற்றறிந்த மேலோருக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப்போக்கு வரத்தில் கண்ணியம் காப்பது அவசியம். 

ரோகினி:

இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்த கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் - வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன் விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்:

இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல்-ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு. நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும். 

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.