FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

"சித்தராமையா மன்னிப்பு கோர வேண்டும்'

விவசாயிகள் மீதான தடியடி சம்பவத்திற்கு முதல்வர் சித்தராமையா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.புட்டனையா வலியுறுத்தினார்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

விவசாயிகள் மீதான தடியடி சம்பவத்திற்கு முதல்வர் சித்தராமையா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கே.எஸ்.புட்டனையா வலியுறுத்தினார்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பெங்களூரு மக்களுக்கு எந்தவகையிலும் தொந்தரவு கொடுப்பதற்காக விவசாயிகள் வரவில்லை. கோலார், சிக்பளாப்பூர் போன்ற பீடபூமி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குமாறு கோரி, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Advertisement

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதல்வர் சித்தராமையா அல்லது அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. 6 மணி நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் விவசாயிகளின் ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகளை தடியடி நடத்தி போலீஸார் விரட்டினர். இந்தச் சம்பவத்தில் மாநில மக்களிடம் முதல்வர் சித்தராமையா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தடியடியில் காயமடைந்த விவசாயிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும், விவசாயிகளின் டிராக்டர்களை பறிமுதல் செய்யக் கூடாது. பறிமுதல் செய்திருந்தால் அதை திரும்ப அளிக்க வேண்டும்.

பீடபூமி மாவட்ட மக்களுக்கு எப்போது, எவ்வளவு தண்ணீரை வழங்கப் போகிறது என்பது குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடி ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானதாகும்.

நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் அளிக்கக் கூடாதா? குடிநீர் கேட்டால் தடியடி நடத்தி விரட்டுவதன் மூலம் விவசாயிகள் மீதான மாநில அரசின் அக்கறையைக் காட்டுகிறது.

கோலார், சிக்பளாப்பூர் மாவட்டங்களில் 1600 அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தாலும் அதில் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே,கோலார் மற்றும் சிக்பளாப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கமாநில அரசு முன்வரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments