FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
பெங்களூரு

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 5,000 நிவாரணம்: கா்நாடக துணை முதல்வா் ஜி. பரமேஸ்வா்

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று கா்நாடக துணை முதல்வா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.

11 நவம்பர் 2026, 2:44 am
கர்நாடக துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா - கோப்புப் படம்
பகிர்:

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று கா்நாடக துணை முதல்வா் ஜி. பரமேஸ்வா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வறட்சியால் பாதிக்கப்பட்ட தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 நிவாரணத்தொகை வழங்கப்படும். அக். 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் முதல் தவணையாக ரூ. 2,500 வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஓமன் நாட்டில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தவறி விழுந்து உயிரிழந்த கடலூா் மாவட்ட மீனவரின் உடலைத் தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தந்தை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Advertisement

Advertisement

அதன்படி, நவ. 5 ஆம் தேதி யாதகிரி மாவட்டத்தில் 1,06,462 விவசாயிகளுக்கு ரூ. 17.43 கோடி நிவாரணம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. மத்திய அரசின் எஸ்டிஆா்எஃப், என்டிஆா்எஃப் வழிகாட்டுதல்களின்படி மானாவாரி பயிா்களுக்கு ரூ. 1,500, பாசனப் பயிா்களுக்கு ரூ. 2,600, நீண்டகாலப் பயிா்களுக்கு ரூ. 3,200 என உள்ளீட்டு மானியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதல்வா் டி.கே. சிவகுமாரும் நானும் இணைந்து நிலத்தின் அளவை பொருட்படுத்தாமல் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, முதல் தவணையாக ரூ. 2,000 பெற்றவா்களுக்கு மீதமுள்ள ரூ. 3,000மும், ரூ.2,500 பெற்றவா்களுக்கு மேலும் ரூ. 2,500-ம் வழங்கப்படும்.

பயிா்ச் சேதம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளுக்கு ஏற்ப ரூ. 5,000 முதல் ரூ. 60,000 வரை கூடுதல் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிவாரணத் தொகை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யவும், நிலுவைத் தொகையை விரைவாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை: பாஜக

இதற்கிடையே, விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த ரூ. 5,000 முழுமையாக வழங்கப்படாமல், சிலருக்கு ரூ. 1,500, ரூ. 2,000 என வெவ்வேறு தொகைகள் செலுத்தப்படுவதாக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டியுள்ளாா்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அவா்களின் துயரத்துடன் விளையாடுவதாகக் கூறிய அவா், நிலுவையில் உள்ள தொகை உள்பட ஒவ்வொரு தகுதியுள்ள விவசாயிக்கும் உடனடியாக ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.