அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 பயிர்க்கடன் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு
அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவிப்பு...
கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடியில் படிப்படியாக கூடுதல் சலுகைகளை முதல்வர் விஜய் அறிவித்து வருகிறார்.
அதன்படி முன்னதாக, ரூ. 75,000 வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி எனவும் ரூ. 75,000 -க்கு மேல் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு ரூ. 35,000 தள்ளுபடி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
புதிய சலுகை
இதையடுத்து முதல்வர் விஜய் இன்று பயிர்க்கடன் தள்ளுபடியில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளார்.
அதன்படி பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 75,000 தள்ளுபடி என அறிவித்துள்ளார்.
"கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க் கடன்களுக்கான கால வரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்படுகிறது.
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.