"வாகனப் பாதுகாப்புக்கு எண்மத் தொழில்நுட்பம் உதவுகிறது'
எண்மத் தொழில்நுட்பத்தால் வாகனங்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக ஐபான் எண்ம தொழில்நுட்பக் குழுமத்தின் இயக்குநர் ஜே.பி.பிரகாஷ் தெரிவித்தார்.
எண்மத் தொழில்நுட்பத்தால் வாகனங்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக ஐபான் எண்ம தொழில்நுட்பக் குழுமத்தின் இயக்குநர் ஜே.பி.பிரகாஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 2019-ஆம் ஆண்டிற்குள் தேசிய அளவில் அனைத்து வாகனங்களையும் எண்ம தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது வரவேற்கத்தக்க முடிவாகும்.
எண்ம தொழில்நுட்ப எண் பலகையால், வாகனங்கள் திருடு போகாமலும், கடத்தில் உள்ளிட்டவகைகளுக்கும் பயன்படுத்தும் வாகனங்களையும், அதன் உரிமையாளர்களையும் எளிதாக கண்டறிய முடியும்.
மேலும் விபத்துகளை ஏற்படுத்திவிட்டு செல்லும் வாகனங்களையும் எளிதாக கண்டறியமுடியும்.
மத்திய அரசு வாகனங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு எண்ம தொழில்நுட்பத்தை எண் பலகை மூலம் புகுத்தியுள்ளது.
இதற்கான தீர்வை ஐபான் எண்ம தொழில்நுட்ப குழுமம் கண்டறிந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் வாகன உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.
பேட்டியின் போது, அக்குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.