ஓடிடியில் ஆலியா பட்டின் ஆல்பா எப்போது?
நடிகை ஆலியா பட்டின் ஆல்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...
நடிகை ஆலியா பட்டின் ஆல்பா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் - ஷர்வாரி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆல்பா.
ஸ்பை ஆக்ஷன் கதைகளத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் படத்தில் நடிகர்கள் அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ’ஆல்பா’ திரைப்படம், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் வசூல் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், ஆல்பா திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Details regarding the OTT release of actress Alia Bhatt's film Alpha have been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.