உளவுத் திரைப்படமான ஆல்ஃபா ஓடிடி தேதி அறிவிப்பு!
ஆல்ஃபா திரைப்படத்தின் ஓடிடி தேதி...
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவான ஆல்ஃபா ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ஆலியா பட் - ஷர்வாரி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆல்பா. உளவாளிகளின் கதையாக திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை இயக்குநர் ஷிவ் ரவைல் இயக்கியுள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
Advertisement
Advertisement
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ’ஆல்பா’ திரைப்படம், உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றிப்படமானது. இந்த நிலையில், இப்படம் ஆக. 28 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளதால் ஓடிடியிலும் கவனத்தைப் பெறலாம் எனத் தெரிகிறது.
The OTT release date for Alpha, starring Bollywood actress Alia Bhatt, has been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.