கஞ்சா விற்பனை: இளைஞர் கைது
கஞ்சாவை விற்பனை செய்ததாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கஞ்சாவை விற்பனை செய்ததாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு தலகட்டபுரா வாஜரஹள்ளியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (32). இவர் தனது வீட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம்.
தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று பொன்னுசாமியைக் கைது செய்தனர். இவரிடம் இருந்து 3 கிலோ 200 கிராம் கஞ்சா, செல்லிடப்பேசி, மோட்டார் சைக்கிள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தலகட்டபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.