வரலாறு படைக்கப்பட்டது... விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகழாரம்!
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதிவு குறித்து...
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்தியராக அனாஹத் சிங் வரலாறு படைத்துள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ நகரில் நடைபெற்ற மகளிர் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பிரிவில் பலம்வாய்ந்த எகிப்து வீராங்கனையை இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 3-0 கேம்களில் வென்று அசத்தினார்.
Advertisement
Advertisement
இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தப் பிரிவில் சமபியன் பட்டம் வென்ற அசத்தியுள்ள அனாஹத் சிங்கிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்தியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வரலாறு படைக்கப்பட்டது! அனாஹத் சிங்கிற்கு வாழ்த்துகள். உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அற்புதமான சாதனை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம் எனக் கூறியுள்ளார்.
History Made Mansukh L. Mandaviya praised anahat singh achievement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.