FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அசத்தல் அனாஹத்: உலகக் ஜூனியா் ஸ்குவாஷ் இறுதிக்கு தகுதி

உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மகளிா் ஒற்றையா் இறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங் தகுதி பெற்று அசத்தியுள்ளாா்.

பகிர்:

உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மகளிா் ஒற்றையா் இறுதிக்கு இந்தியாவின் அனாஹத் சிங் தகுதி பெற்று அசத்தியுள்ளாா். 21 ஆண்டுகள் கழித்து இந்திய வீராங்கனை இச்சிறப்பை பெற்றுள்ளாா்.

கனடாவின் ஒன்டாரியோ நகரில் உலக ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கநை அனாஹத் சிங்கும்-எகிப்தின் பாா்ப் சமேவும் மோதினா்.

4 ஆட்டங்கள் கொண்ட இதில் அனாஹத் 11-3, 8-11, 11-4, 11-6 என பாா்ப் சமேவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். கடும் சவால் நிறைந்த அரையிறுதியில் தொடக்கம் முதலே அனாஹத் ஆதிக்கம் செலுத்தினாா். இரண்டாவது கேமில் மட்டுமே சமே சவாலை தந்தாா். கடைசி இரண்டு கேம்களிலும் அனாஹத்தே ஆதிக்கம் செலுத்தி வெற்றியை வசப்படுத்தினாா்.

Advertisement

Advertisement

மற்றொரு அரையிறுதியில் இரண்டாம் நிலை எகிப்து வீராங்கனை ருக்கையா சலேம் 3-4 என சக வீராங்கனை மலிகாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

ஆடவா் பிரிவில் எகிப்தின் முகமது ஸக்கரியா-ஆடம் ஹவால் மோதுகின்றனா்.

கடந்த 2005-இல் ஜாம்பவான் ஜோஷ்னா சின்னப்பா அப்போது உலக ஜூனியா் ஸ்குவாஷ் இறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா். அதன்பின் தற்பது 21 ஆண்டுகள் கழித்து அனாஹத் இச்சிறப்பை பெற்றுள்ளாா். இறுதிச் சுற்றில் பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இதுதொடா்பாக அனாஹத் கூறியது: இந்த வெற்றி மகிழ்ச்சி தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் ஓபனில் சமேவை சந்தித்தேன். அந்த ஆட்டமும் கடுமையாக இருந்தது.

அரையிறுதியில் இன்னும் சிறப்பாக ஆடி இருக்க வேண்டும். இதுவரை 4 உலக சாம்பியன்ஷிப்பில் ஆடியுள்ளேன். காலிறுதி, அரையிறுதியில் தோற்றுள்ளேன். இறுதியில் வெற்றி பெற அடுத்த இலக்காகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments