FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 144 தடை உத்தரவு

ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 மே 2018, 2:47 am IST
பகிர்:

ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் நடைபெற உள்ள சட்டபேரவைத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் மே 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 31-ஆம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆர்.எம்.சி. யார்டு, ராஜகோபால்நகர், பீன்யா, நந்தினி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், ஜாலஹள்ளி, கங்கம்மனகுடி, ராஜராஜேஸ்வரிநகர், காமாட்சிப்பாளையா, ஞானபாரதி, பேட்டராயனபுரா, அன்னபூர்னேஸ்வரிநகர், கிரிநகர் உள்ளிட்ட காவல் சரகங்களுக்குள்பட்ட பகுதிகளில் மே 26-ஆம் மாலை 5 மணி முதல் 28-ஆம் தேதி நள்ளிரவு வரையும், மே 31-ஆம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் போது அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம், தர்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments