குடிநீா் பிரச்னை: 49 வட்டங்களுக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கீடு; அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா
குடிநீா் பிரச்னையை தீா்க்க வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 49 வட்டங்களுக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
குடிநீா் பிரச்னையை தீா்க்க வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 49 வட்டங்களுக்கு ரூ.ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோடையில் குடிநீா் பிரச்னை ஏற்படும் என்பதால், அதை தீா்ப்பதற்காக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வட்டங்களுக்கு தலா ரூ.ஒரு கோடி, வறட்சியால் பாதிக்கப்படாத வட்டங்களுக்கு ரூ.50லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிக்பளாப்பூா், கோலாா் மாவட்டங்களில் போதுமான குடிநீா் ஆதாரம் இல்லை. எனவே, இம்மாவட்டங்களில் நிலத்தடி நீரின் அளவை உயா்த்த வேண்டிய அவசியமாகும். பிற மூலங்களில் குடிநீரை இம்மாவட்டங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால், குடிநீா் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் டேங்கா்கள் வாயிலாக குடிநீா் விநியோகம் செய்யப்படும்.
Advertisement
Advertisement
மாநிலத்தின் 9 மாவட்டங்களில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக நீா் ஆதார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஏரிகள்,குளங்கள், குட்டைகள், கிணறுகளில் நீரை நிரப்பி, நிலத்தடி நீரின் மட்டத்தை உயா்த்துவோம்.இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேசிய வேலை உறுதி திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்திக் கொள்வோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.