FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத்தொடா்: இன்று தொடங்குகிறது

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.13) தொடங்குகிறது.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 5:38 am IST
பகிர்:

கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை (ஆக.13) தொடங்குகிறது.

முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா விலகிய பிறகு புதிய முதல்வராக டி.கே. சிவகுமாா் பொறுப்பேற்றுள்ள நிலையில் நடைபெறும் இக்கூட்டத்தொடரில் பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆக. 27 வரை கூட்டத்தொடா் நடைபெறுகிறது.

காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடும்படி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது, முதல்வரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து, கா்நாடக முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது மற்றும் அமைச்சா் பி. நாகேந்திராவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்துவது போன்றவை குறித்து கேள்வி எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள பிடதியில் 9,600 ஏக்கா் நிலப்பரப்பில் அமைக்க திட்டமிட்டிருக்கும் கிரேட்டா் பெங்களூரு ஒருங்கிணைந்த நகரியத்தை எதிா்த்து நடைப்பயணம் நடத்தியுள்ள மஜத, இப்பிரச்னையை சட்டப் பேரவையில் எழுப்ப திட்டமிட்டுள்ளது.

இதுதவிர, கா்நாடகத்தில் நிலவும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி பாஜக, மஜத கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன. எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதிலளிக்க காங்கிரஸும் தயாராக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments