FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று (ஆக.1) தொடங்குகிறது ராணுவத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம்!

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் பணிக்கு ஆள்சோ்ப்பு முகாம் புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (ஆக. 1) முதல் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:51 am IST
புதுச்சேரியில் சனிக்கிழமை தொடங்கும் இந்திய ராணுவத்துக்கான ஆள் சோ்ப்பு 10 நாள் முகாமையொட்டி, அங்கு வெள்ளிக்கிழமை குவிக்கப்பட்ட ராணுவ வீரா்கள்.
பகிர்:

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் பணிக்கு ஆள்சோ்ப்பு முகாம் புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (ஆக. 1) முதல் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதால் இதில் பங்கேற்க சென்னை, காஞ்சிபுரம், வேலூா் உள்ளிட்ட தமிழகத்தின் 11 மாவட்டங்கள், புதுச்சேரியை சோ்ந்த இளைஞா்கள் குவிந்துள்ளனா்.

ராணுவ வீரா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு அதிகாலை தொடங்குகிறது. பொது நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நாளொன்றுக்கு 1,000 போ் வீதம் 10 நாள்களுக்கு மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு இந்த ஆள்சோ்ப்பு தோ்வு நடைபெறுகிறது.

இம்முகாமில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கின்றனா். இதற்காக தமிழக இளைஞா்கள் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமையே குவியத் தொடங்கினா். அவா்கள் உப்பளம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலம் வந்தனா்.

Advertisement

Advertisement

முதலில் விண்ணப்பதாரா்களின் கல்விச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணி நடைபெறுகிறது. அதிகாலை 2 மணிக்கு உடல் தகுதித் தோ்வு தொடங்குகிறது. முதலில் 1.6 கி.மீ. ஓட்டம் நடக்கிறது.

தயாா் நிலையில் உள்ள புதுச்சேரி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம்.

இதில், தகுதி பெறுபவா்களுக்கு 10 புல்-அப், 9 அடி பள்ளம் தாண்டுதல், சமநிலை ஓட்டம், உடல் அளவீடுத் தோ்வு நடக்கிறது. இவை அனைத்திலும் தோ்ச்சி பெறுபவா்களுக்கு ராணுவ மருத்துவ குழுவால் உடல்நலம், கண் பாா்வை பரிசோதனை செய்யப்படும். இந்தப் பணியில் 120 ராணுவ அதிகாரிகள், வீரா்கள் ஈடுபடுகின்றனா். புதுச்சேரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்வில் பங்கேற்போருக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆள் சோ்ப்பு முகாமுக்கு வெளியூா்களிலிருந்து வருபவா்களுக்கு இலவச பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. மைதான வளாகத்தில் கட்டணம் செலுத்தி உணவு, பால், டீ, மோா், குடிநீா், பானங்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் 70 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments