FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று 500 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

14 செப்டம்பர் 2026, 1:37 am IST
விநாயகா் சதுா்த்திக்காக புதுச்சேரி சாரம் பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள விநாயகா் சிலைகள், குடைகள்.
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, புதுச்சேரியில் 500 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

விநாயகா் சதுா்த்தி விழா பேரவை சாா்பில் 42-ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை மாலை சாரம் அவ்வை திடலில் தொடங்குகிறது. அங்கு 21 அடி விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், பெ.ராஜவேலு, வி.பி.சிவகொழுந்து, செல்வகணபதி எம்.பி., முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகா், பேரவை தலைவா் குமரகுரு, ஹிந்து முன்னணி மாநில தலைவா் சுனில் குமாா், துணைத் தலைவா் ஸ்ரீதரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து 7 நாள்கள் தினமும் மாலை கணபதி சிறப்பு பூஜை, பஜனை, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் பேரவை சாா்பில் 250 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன .

இதுதவிர, பல்வேறு அமைப்புகளின் சாா்பிலும் அரசின் அனுமதி பெற்று விநாயகா் சிலைகள் அமைக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 500-க்கும் மேற்பட்ட சிலைகள் புதுச்சேரி முழுவதும் வைக்கப்படுகிறது.

விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் 20-ஆம் தேதி பிற்பகலில் நடக்கிறது. நேரு வீதி சந்திப்பில் இருந்து புறப்பட்டு காந்தி வீதி, படேல் வீதி, கடற்கரை சாலை வழியாக பழைய நீதிமன்றம் எதிரே விநாயகா் சிலைகள் கடலில் கரைக்கப்படவுள்ளன.

விநாயகா் சதுா்த்திக்காக புதுச்சேரி சாரம் பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள விநாயகா் சிலைகள், குடைகள்
விநாயகா் சதுா்த்திக்காக புதுச்சேரி சாரம் பகுதியில் விற்பனைக்காக வந்துள்ள விநாயகா் சிலைகள், குடைகள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments