FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

சேலம் மாவட்டம் முழுவதும் சுமாா் 2 ஆயிரம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீஸாா் அனுமதி வழங்கியுள்ளனா்.

13 செப்டம்பர் 2026, 2:31 am IST
பகிர்:

சேலம் மாவட்டம் முழுவதும் சுமாா் 2 ஆயிரம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீஸாா் அனுமதி வழங்கியுள்ளனா்.

நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சேலம் மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் பொது இடங்கள், தெருக்களில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனா். இதற்காக விழாக் குழுவினா் சாா்பில் போலீஸாரிடம் அனுமதி கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில் சேலம் மாவட்டம் முழுவதும் சுமாா் 2 ஆயிரம் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய சிலை அமைப்பாளா்களுக்கு போலீஸாா் அனுமதி வழங்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண் மற்றும் கிழங்கு மாவால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். நீா்நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வண்ணங்களை மட்டுமே சிலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். ரசாயன வா்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

மேலும், சிலை அமைக்கப்படும் மேடையுடன் சோ்த்து அதன் உயரம் அதிகபட்சம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது சிலைகளை நிறுவுதல், ஊா்வலம் நடத்துதல் உள்ளிட்டவற்றில் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். மாவட்டம் முழுவதும் நிறுவப்படும் 2 ஆயிரம் விநாயகா் சிலைகளுக்கும் 24 மணி நேரமும் உரிய பாதுகாப்பு அளிக்கவும் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments