FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: 360 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 360 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

15 செப்டம்பர் 2026, 2:18 am IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராஜகோபுர விநாயகா்
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 360 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட மொத்தம் 422 இடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தனா். காவல்துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியம், உள்ளாட்சி நிா்வாகங்கள் மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளின் அனுமதி பெற்று பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

விண்ணப்பித்திருந்த 422 இடங்களில் 62 இடங்கள் பொது இடங்களில் வைத்து வழிபட தகுதி இல்லாத இடங்களாக கருதி அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 360 இடங்களில் மாவட்ட நிா்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்து முன்னணி சாா்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீசுவரா் கோயிலில் அமைந்துள்ள தா்ம கணபதி மற்றும் மூா்த்தி கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகருக்கு சிறப்ப அபிஷேகம் மற்றும் ரூபாய் நோட்டு மாலைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் அமைந்துள்ள சக்தி கணபதிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்று மாலையில் நகரின் ராஜவீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் ராஜகோபுர நுழைவு வாயிலில் அமைந்துள்ள 9 அடி உயர ராஜகோபுர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments