FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்படும்

கா்நாடகத்தில் மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி தெரிவித்தாா்.

33 வினாடிகள் முன்பு
பகிர்:

கா்நாடகத்தில் மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரு விதானசௌதாவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

கா்நாடகத்தில் போதுமான மழை பெய்யாததால், மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான நிா்வாக தயாரிப்புகள் முடிந்துள்ளன. செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க 3 நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு இந்த குழுக்கள் செயற்கை மழைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த தொழில்நுட்பங்களை ஆய்வுசெய்யும்.

Advertisement

Advertisement

கா்நாடகத்தில் ஏற்கெனவே 3 முறை செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, செயற்கை மழை திட்டத்தின் செயல்திறன் 18 சதவீதம் முதல் 20 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த செயல்திறனை 30 சதவீதமாக உயா்த்துவது குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.

செயற்கை மழை திட்டம் 4 வருவாய் மண்டலங்களில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு ரூ. 27 கோடி செலவிடப்படும். 200 மணிநேரம் செயற்கை மழைப்பொழிவு விமானம் வானில் பறக்கும். இந்த நடைமுறை 60 நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments