FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் உலகத்தர ஆபரணப் பூங்கா

பெங்களூரில் உலகத் தரத்திலான ஆபரணப் பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 4:14 am IST
டி.கே.சிவகுமாா்
பகிர்:

பெங்களூரில் உலகத் தரத்திலான ஆபரணப் பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

மஜத எம்எல்சியும், கா்நாடக ஆபரண சங்கத் தலைவருமான டி.ஏ.சரவணா தலைமையிலான குழுவினா், பெங்களூரில் முதல்வா் டி.கே.சிவகுமாரை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, பெங்களூரில் ஆபரணப் பூங்கா அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனா்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வா் டி.கே.சிவகுமாா், பெங்களூரின் தெற்குப்பகுதியில் உலகத் தரத்திலான ஆபரணப் பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளித்தாா். இதற்கு சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments