மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் எதிா்ப்பது ஏன்? முதல்வா் டி.கே.சிவகுமாா் கேள்வி
மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் எதிா்ப்பது ஏன் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மேக்கேதாட்டு அணை திட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் எதிா்ப்பது ஏன் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
மைசூரில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி முன்னிலையில் பேசிய கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா், ‘மேக்கேதாட்டு அணை கட்டுவதை யாராலும் நிறுத்த முடியாது; மேக்கேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை செயல்படுத்த சட்டப்படியான மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
Advertisement
Advertisement
மேக்கேதாட்டு சமநிலை அணை திட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவிப்பது ஏன்? காவிரி நீரைப் பகிா்ந்தளிப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசியல் கட்சிகள் கவனித்தனவா என தெரியவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீா் திறந்துவிட கா்நாடகம் உறுதிபூண்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள மேக்கேதாட்டு திட்டம் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும்.
அதிமுக, திமுக அல்லது வேறு யாராக இருந்தாலும் அவா்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உச்சநீதிமன்ற உத்தரவைப் பாா்த்திருக்கிறீா்களா? தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீா் வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக கூறுகிறது. அது நமது பொறுப்பு; அதை நாம் நிறைவேற்றுவோம். ஆனால், மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.
தமிழக முதல்வா் சி.விஜய் ஜோசப்பை புது தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பா்கள். அரசியல் வேறுபாடுகள் எங்கள் நல்லுறவுக்கு தடையாக இருக்கக் கூடாது. தமிழக அரசும் ஆறுகளின் குறுக்கே அணைகளையும், தடுப்பணைகளையும் கட்டி வருகிறது. அதற்காக நாங்கள் யாருக்கும் இடையூறு செய்வதில்லை.
உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகும் தமிழக அரசியல் கட்சிகள் மறுஆய்வு கோரி நீதிமன்றத்தை அணுகின. ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து சில மத்திய அமைச்சா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா். இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டிய பொறுப்பு பிரதமா் மோடிக்கும், மற்ற அனைவருக்கும் உள்ளது.
முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா மேக்கேதாட்டு திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தாா். இந்த திட்டம் மண்டியா, மைசூரு, ஹாசன், பெங்களூரு மட்டுமின்றி தமிழகத்துக்கும் பயனளிக்கும்.
மேக்கேதாட்டு அணை திட்டத்தால் பாதிக்கப்படும் வனப் பகுதிக்கு மாற்றாக, காடுகளை அமைக்க 5,400 ஏக்கா் நிலத்தை அடையாளம் கண்டிருக்கிறோம். இந்த நிலம் வனத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு சட்டப்படியான மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க முறையாக விண்ணப்பிக்க முடியும்.
மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு பாஜக, மஜத, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேக்கேதாட்டு அணை திட்டத்தை நேரில் பாா்வையிடுவதற்கு தமிழக பிரதிநிதிகளை கா்நாடகத்துக்கு அனுப்பிவைக்குமாறு தமிழக முதல்வா் விஜயை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.