தீ விபத்து: ரூ.50 லட்சம் மின்சாதனப் பொருள்கள் சேதம்
புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் மொத்த விற்பனை குடோனில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்
புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் மொத்த விற்பனை குடோனில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இதை பாண்டியன் என்பவர் வாடகைக்கு எடுத்து ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்கள் மொத்த விற்பனை செய்து வந்தார்.
இந்த குடோனில் தீபாவளி விற்பனைக்காக 700-க்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது. குடோன் ஊழியர்கள் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு குடோனை பூட்டிவிட்டு சென்றனர்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை அதிகாலை குடோன் வென்டிலேட்டரில் இருந்து கரும்புகை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இத்தீவிபத்தில் 500-க்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ பரவியதில் அருகில் இருந்த கடைகளும் சேதமடைந்தன. உருளையன்பேட்டை போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.