FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பிரதானக் கட்சிகளை மக்கள் ஆதரிக்கக் கூடாது: மார்க்சிஸ்ட்} லெனினிஸ்ட் வேண்டுகோள்

புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி இந்திரா நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 3 பிரதானக் கட்சிகளையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் புதுச்ச

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

புதுச்சேரி, அக்.8: புதுச்சேரி இந்திரா நகர் இடைத் தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய 3 பிரதானக் கட்சிகளையும் மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

 புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 என்.ஆர்.காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சியில் நடந்த ஊழல், ஒடுக்குமுறைகளை சகித்துக் கொள்ளாத மக்கள், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பினர்.

Advertisement

Advertisement

 தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு தலித் படுகொலை, சமச்சீர் கல்வியை இழுத்தடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது. அக்கட்சியிடம் புதுச்சேரிக்கென்று மக்கள் திட்டம் எதுவும் கைவசம் இல்லை. எனவே இந்திரா நகர் தொகுதி மக்கள் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும். காலவரையறைக்குள் ஸ்மார்ட் கார்டு பெறாத ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருள்கள் நிறுத்தப்படும் என்று குடிமைப்பொருள் வழங்கும் துறை அறிவித்துள்ளது. இதைக் கண்டிக்கிறோம்.

 தனியார் நிறுவனம் மூலம், தனி நபர்களின் அந்தரங்க பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கைரேகைகள், கண்கள் அமைப்பு உள்ளிட்ட தகவல்களை பெறும் ஸ்மார்ட் கார்டு முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு சட்ட ஒப்புதல் இல்லாததால் புதுச்சேரி அரசு அத்திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

 புதுச்சேரியில் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. இதற்குக் காரணமாக வேலையின்மை, சீரழிந்த சுற்றுலா கலாசாரம், கட்டுப்பாடற்ற நில வணிகம் உள்ளிட்டவை அமைகின்றன.

 குறிப்பாக நில வணிகத்தில் ஆட்சியில் இருப்பவர்களே ஈடுபடுகின்றனர். புதுச்சேரியில் பல கொலைகள் நில வணிகத்தால் தான் ஏற்படுகிறது. மோதல்களும் இதில் தான் தொடங்குகிறது. நில வணிகப் பிரச்னையில் கூலிப்படைகள் நுழைக்கப்படுகிறது. இதனால் கொலைகள் தவிற்க முடியாததாகி விடுகிறது. எனவே நில வணிகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்.

 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3500 தீபாவளி பரிசு வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டம் அனைத்து கிராமங்களிலும் இடைவெளி இன்றித் தொடர்ந்து நடக்க வேண்டும். இத்திட்டத்தில் ஊதிய நிலுவையை விரைந்து வழங்க வேண்டும்.

 அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை வகுப்புகளில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு 21 வயது என்று நிர்ணயிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும்.

 கல்வி அமைச்சர் பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தேர்வு எழுதிய சர்ச்சை தொடர்பாக தமிழகத்தில் விசாரணை முடிவுகள் வெளிவரும் வரை அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியன்.

 கட்சியின் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் பி.சங்கரன், ஜி.பழனி

 உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments