புதுச்சேரி அமைச்சர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு
விழுப்புரம், அக். 8: 10-ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக புதுவை கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் வழக்குப் பதி
விழுப்புரம், அக். 8: 10-ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக புதுவை கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுவை மாநில கல்வி அமைச்சராக உள்ள கல்யாணசுந்தரம் 10-ம் வகுப்பில் அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறாததால், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனியார் பள்ளியில் தனித்தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார்.
இதில் 29-ம் தேதி நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் கிளம்பியது. விசாரணையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.குப்புசாமி, மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்தார்.
Advertisement
Advertisement
அந்த புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸýக்கு பரிந்துரை செய்தார். அவர்களின் விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் கல்யாணசுந்தரம், ஆசிரியர் ஆதவன், மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் ரஜினிகாந்த் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை மாலை வழக்குப்பதிவு செய்தனர். ஆள்மாறாட்டம் செய்தல் (491), மோசடி செய்தல் (420), குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல் (465, 466, 468), தெரிந்தே குற்றம் செய்தல் (471), மோசடி ஆவணம் தயாரித்தல் (473), அரசு அலுவலரை ஏமாற்றுதல் (120-பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ஆதவன், ரஜினிகாந்த் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில் 29-ம் தேதி நடந்த தேர்வின்போது, தேர்வு கண்காணிப்பாளர் போன்று போலி ஆவணம் தயார் செய்து தேர்வு மையத்துக்குள் ஆதவன் சென்றுள்ளார். அந்த ஆவணத்தை தயாரிக்க ரஜினிகாந்த் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.எனினும் அமைச்சருக்கு பதிலாக தேர்வு எழுதியவர் யார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை என்று போலீஸôர் கூறுகின்றனர். ஆதவன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஓரிரு நாளில் கைது செய்யப்படலாம் என்று போலீஸôர் தெரிவித்தனர். மேலிட உத்தரவைத் தொடர்ந்தே அமைச்சர் கல்யாணசுந்தரம் கைது செய்யப்படுவாரா என்பது தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.