FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

400 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை

திருவள்ளூர், அக். 8: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,286 வாக்குப்பதிவு மையங்களில் 400 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.  திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்கள் மற்றும்

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:19 am IST
பகிர்:

திருவள்ளூர், அக். 8: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2,286 வாக்குப்பதிவு மையங்களில் 400 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

 திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 17, 19-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

 இதற்கென மாவட்டம் முழுவதும் 2,286 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

 தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு பணிகளில் போலீஸôர் ஈடுபட்டுள்ளனர்.

 இதற்கென மாவட்டம் முழுவதும் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

 அதன்படி திருவள்ளூர், திருத்தணி நகராட்சிகள், ஆரணி, திருமழிசை, ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட 8 பேரூராட்சிகள், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, கடம்பத்தூர், பூண்டி, திருவள்ளூர், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் ஆகிய ஒன்றியப் பகுதியில் மொத்தம் 2,286 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இவற்றில் மொத்தம் 400 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மிக பதற்றமான மையங்கள் குறித்து போலீஸôர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments