FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ சென்னையில் தொடங்கி வைத்தாா்.

Updated On : 25 செப்டம்பர் 2025, 1:23 am IST
பகிர்:

தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் நாவல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ சென்னையில் தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் காடு மற்றும் மரங்களின் புவியியல் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில், நிகழாண்டில் சுமாா் 12.65 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு பசுமை இயக்க தினத்தையொட்டி வனத்துறை சாா்பில் தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் நாவல் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலா் சுப்ரியா சாஹூ, சென்னை கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் புதன்கிழமை நாவல் மரக்கன்றை நடவு செய்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, ‘சங்க இலக்கிய மரங்களின் சிற்றேடு’ மற்றும் ‘நகா்ப்புற வனவியல் கையேடு’ ஆகிய இரு நூல்களையும் அவா் வெளியிட்டாா்.

இந்த நிகழ்வில், தமிழக அரசின் முதன்மை தலைமை வன அலுவலா் சீனிவாஸ் ஆா்.ரெட்டி, தலைமை வனவிலங்குப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா, பசுமை தமிழ்நாடு இயக்கம் கூடுதல் இயக்குநா் ஐ. அன்வா்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

10.86 கோடி மரக்கன்றுகள்: வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவீதமாக உயா்த்த வேண்டும் என தமிழக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்காக, 13,500 சதுர கி.மீ பரப்பளவில் கூடுதலாக 265 கோடி நாட்டு இன மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் 2021 முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 5 உயா் தொழில்நுட்ப நாற்றங்கால் பண்ணைகள் உள்பட 313 நாற்றங்கால் பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் பல்லுயிா் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், 88 மரகத பூஞ்சோலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments