‘மழையால் புறநகர் மின் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படும்’!
சென்னையில் மழையால் புறநகர் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் மழையால் புறநகர் மின்சார ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் பகுதியில் பெய்த மழையால் தண்டவாளங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, சென்னை கடற்கரை முதல் திருமால்பூா் வழியாக இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. புதுச்சேரியிலிருந்து திருப்பதி செல்லும் ரயிலும் வாலாஜாபாத்தில் நிறுத்தப்பட்டு சிறப்புப் பேருந்துகளில் பயணிகள் வெள்ளிக்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, சனிக்கிழமையும் மாலையில் மழை பெய்தது. இரவு வரை நீடித்த மழையால் சென்னையில் இரு வழிகளில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் வழக்கமான வேகத்தை குறைத்து இயக்கப்பட்டதாகவும், இரவு 7 மணி முதலே புகா் ரயில்கள் சேவை தாமதமானதாகவும் கூறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.