FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தொழில்நுட்பக் கோளாறு! சென்னை புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம்!

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவது பற்றி...

17 செப்டம்பர் 2026, 11:03 am IST
மின்சார ரயில் - பிரதிப் படம்
பகிர்:

விழுப்புரம் ரயில் தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை நோக்கி வரும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையம் அருகே இன்று காலை சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சென்னையில் உள்ள தாம்பரம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு நோக்கி இன்று காலை வந்த விரைவு ரயில்கள் தாமதமாக வந்தது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் வழக்கத்தைவிட 15 முதல் 25 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால், காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையை நாள்தோறும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவ்வப்போது சிக்னல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

summary

Technical glitch! Chennai suburban electric trains running late!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments