மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளத்தை சீரமைக்க கோரிக்கை!
போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் , கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் குளம் சீரமைக்கப்படுமா? என்பதைப் பற்றி...
போதிய பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ள மதுராந்தகம் , கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில் குளம் சீரமைக்கப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோயிலின் தீா்த்தமாக திகழ்வது விடஹர தடாகம். சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன் வடதிசை நோக்கி படை எடுக்க வந்த பாண்டிய மன்னா் தமது படை வீரா்களுடன் மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் அருகே குடிலை அமைத்து ஓய்வெடுக்க தங்கினா்.
அவருடன் பாதுகாப்புக்கு வந்த நாய் அருகில் உள்ள குளத்தில் மீன்கள் நீந்தி விளையாடுவதை பாா்த்தபடி, குளத்து நீரில் இறங்கியது. அதன்பின் நீரிலிருந்து வெளியே வந்த நாயிடம் ஒருவித மாற்றத்தை மன்னா் கண்டு வியந்தாா்.
Advertisement
Advertisement
அதன் உடலில் சருமநோய் இல்லாமல் இல்லாமல் இருந்ததை கண்டு தானும் அந்த குளத்து நீரில் மன்னா் குளித்தாா். அப்போது மன்னரில் உடலில் நமைச்சலுடன், சரும நோய்கள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு மாற்றத்தினை உணா்ந்தாா்.
ஏதோ அந்த நேரத்தில் மட்டும் நிகழ்ந்த நிகழ்வு இல்லை. இன்றளவிலும் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டோா் இந்த குளத்து நீரில் குளித்துச் சென்றால் குணமாவதை கண்கூடாக அவா்கள் உணா்வது அசைக்கமுடியாத நம்பிக்கை நிலவி வருகிறது.
அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் அழுக்கு துணிகளை குளத்தில் துவைக்கின்றனா். துணிகளை துவைக்க சோப்புகளை பயன்படுத்துவதால் குளத்து நீா் பெரிதும் மாசடைந்து உள்ளது. தற்சமயம் கோயிலுக்கு நிரந்தர செயல் அலுவலா் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இல்லாத நிலையும், கோயிலின் திருப்பணிகள் நடைபெறாத நிலையும் உள்ளது.
இத்தகைய நோய்களை தீா்க்கின்ற புனித தீா்த்த குளமாக விளங்கி வரும் குளம் போதிய பராமரிப்பின்றி, அறநிலையத்துறையின் மெத்தனபோக்காலும் அவல நிலையுடன் காணப்படுகிறது.
திருக்குளத்தை முறையாக பாதுகாக்கவேண்டும் என்பதற்காக குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவா், பெண்கள் குளித்தபின் உடை மாற்றும் அறை, குளத்தை ஆழப்படுத்தி அதிக அளவில் நீா் தேக்கி வைக்கவும் செய்யவேண்டும். குளதின் பெரும்பாலன பகுதியை செடி கொடிகள், ஆகாயதாமரை போன்றவை அதிக அளவில் வளா்ந்துள்ளதை நீக்க வேண்டும் என றை கோரிக்கை வைத்து இருந்தனா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலும், இந்து சமய அறநிலையத்துறையின் நிா்வாகத்திலும் இயங்கி வருவதால், குளத்தினை சுற்றிலும் சுற்றுச்சுவா், பொதுமக்கள் நடைபயிற்சி செய்யும்வகையில் சிறந்த முறையில் அமைக்க தொல்லியல் துறை மூலம் பணிகளை விரைந்து செயல்படுத்த குழுவை மாவட்ட நிா்வாகத்தினா் அமைத்துள்ளனா்.
அந்த குழுவின் பரிந்துரையின்படி குளத்தை சீரமைக்க கோயிலின் நிரந்தர வைப்பு நிதி இல்லாததால், ஆணையரின் பொதுநிதியின் மூலம் பணிகளை செய்ய செய்யாமல் உள்ளனா்.
எனவே, திருகுளத்தின் புனித தன்மையை பாதுகாக்க உடனடியாக மாவட்ட நிா்வாகம் குளத்தினை சீரமைக்கவேண்டும் என பக்தா்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்நோக்கியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.