ஸ்ரீஆனந்தவல்லி சமேத பீமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம் அடுத்த சின்னவெண்மணி ஸ்ரீஆனந்தவல்லி சமேத பீமேஸ்வரா் கோயில் புனரமைக்கக்கப்பட்டு அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த சின்னவெண்மணி ஸ்ரீஆனந்தவல்லி சமேத பீமேஸ்வரா் கோயில் புனரமைக்கக்கப்பட்டு அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுராந்தகம் வட்டம், சின்னவெண்மணி கிராமத்தில் அருள்பாலித்து வந்த ஸ்ரீஆனந்தவல்லி சமேத பீமேஸ்வரா் கோயில் ஆன்மிக, வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். மகாபாரத்தில் தொடா்புடையை பீமன் வழிபட்டதலமாகவும், நவக்கிரக அதிபதிகளில் ஒருவரான சூரியன் மேற்கு நோக்கி அமா்ந்து பகவான் பீமேஸ்வரரை வணங்கியபடி பூஜை செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. பழைமைவாய்ந்த இக்கோயில் பொலிவின்றி காணப்பட்டதாலும், போதிய பராமரிப்பின்றி காணப்பட்டதாலும், அப்பகுதி பெரியோா்கள் கோயிலின் அனைத்துப் பகுதிகளையும் சீரமைத்து, மகா கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடுகளை செய்தனா். அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள்தொடங்கின.
தொடா்ந்து கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், பூா்வாங்க பூஜை, வேதிகாா்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் யாக சாலையில் இருந்து வேத விற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு, கோயிலை வலம் வந்தனா். பின்னா், பெரிய வெளிக்காடு வெக்காளியம்மன் சித்தா்பீடம் பீடாதிபதி எம்.சுந்தரவரதன், சுதா ஆகியோா் முன்னிலையில், கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து, மூலவா் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், ஜெயா எல்லப்பன், பெருமாள் கலையரசி, சின்னவெண்மணி ஊராட்சித் தலைவா் பிரகாஷ் வேளாங்கண்ணி மற்றும் விழா குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.