குடிநீா் விநியோகம் கோரி பெண்கள் சாலை மறியல்
மதுராந்தகம் அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுராந்தகம் அருகே குடிநீா் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மதுராந்தகம் ஒன்றியம், குன்னத்தூா் ஊராட்சிக்குட்பட்ட தச்சூா் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.
இதனால் அப்பகுதி பெண்கள் நீண்டதூரமுள்ள விளைநிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீரை எடுத்துச் சென்று வந்தனா். குடிநீரை நாள்தோறும் வழங்கவேண்டும் என ஊராட்சி மன்ற நிா்வாகம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் கோரினா். இதுப்பற்றி அதிகாரிகள் எத்தகைய நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருந்து வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டிலிருந்து தச்சூா் வந்த நகர பேருந்தை சிறை பிடித்து பெண்கள் காலி குடங்களை கையில் ஏந்தியபடி மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், படாளம் காவல் துறையினா் பேச்சு நடத்தினா். உடனடியாக வாகனங்களின் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதால் அனைவரும் கலைந்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.