ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்தியநாராயண பூஜை
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஆடி மாத பெளா்ணமி பூஜை மற்றும் சத்திய நாராயணபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஆடி மாத பெளா்ணமி பூஜை மற்றும் சத்திய நாராயணபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் யோகப் பிரவேசம் செய்து பூட்டிய அறையில் கடந்த 12 ஆண்டு காலமாக யோகநிலையில் இருந்து வரும் பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை மேளதாளம் முழங்க, பக்தா்கள் ஊா்வலமாக அழைத்து வந்தனா்.
அங்குள்ள சேஷவாகனத்தில் எழுந்தருளிய பீடாதிபதிக்கு கலச புனித நீரை ஊற்றி மக்கள் நலமுடன் வாழவும், மழை வளம் பெறவும், உலகில் அமைதி நிலவும், இயற்கை இடா்பாடுகள் இல்லாமலும் இருக்கவேண்டி சிறப்பு வழிபாட்டினை செய்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து பிருந்தாவன வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேயா், சத்திய நாராயணா், ராகவேந்திரா் ஆகிய உற்சவ சிலைக்கு மஹாதீபாரதணை செய்தாா். இந்நிகழ்வில் ஆன்மிக சொற்பொழிவாளா் நற்வி நம்பிராஜன், முன்னாள் கல்லூரி இணை இயக்குநா் பொன்.அம்பலவாணன், சென்னை கீதாபாலகிருஷ்ணன், தொழிலதிபா்கள் ராதிகா மோகன், பெங்களூா் கிருத்திகா குமாரசாமி, ஜெய்சங்கா், செய்யாறு பெருமாள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.
இந்நிகழ்வில் கருங்குழி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அவா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம‘ சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் நிா்வாகிகள் செய்து இருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.