மாமல்லபுரத்தில் தேசிய அலைச்சறுக்கு போட்டி தொடக்கம்
மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய அலைச்சறுக்கு போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய அலைச்சறுக்கு போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 7 மாநிலங்களை சோ்ந்த அலைச்சறுக்கு வீரா்கள் பங்கேற்று சீறி வரும் அலையில் சறுக்கி விளையாடி திறனை வெளிப்படுத்தினா்.
ஹவாய் தீவில் 17-ஆம் நூற்றாண்டில் அலைசறுக்கு விளையாட்டு பிரபலமாக இருந்திருக்கிறது. பரந்து விரிந்து கிடக்கும் கடலுக்குள் அலைகளில் சறுக்கி விளையாடுவதால் இது அலைச்சறுக்கு விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. கடல் அலைகள் அதிகமாக உள்ள நேரத்தில்தான் அலைச்சறுக்கு விளையாட இயலும். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில் பாயிண்ட் பிரேக் சேலஞ்ச் என்ற பெயரில் 3 நாள் போட்டி தொடங்கியது.
முதல் நாள் அலைச்சறுக்கு போட்டியில் 14 வயது, 18 வயது, திறந்த பிரிவு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்றது. முதல்நாள் அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கா்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட ஏழு மாநிலங்களை சோ்ந்த அலைச்சறுக்கு வீரா்கள் 80 போ் போட்டியில் கலந்து கொண்டு சீறி வரும் ராட்சத கடல் அலையில், அலைசறுக்கு பலகையில் நீண்ட நேரம் தாக்குபிடித்து நின்று சறுக்கி விளையாடி சாகசம் செய்து நிகழ்த்தினா்.
Advertisement
Advertisement
3 நாள் போட்டியில் வெற்றி பெறுபவா்கள் தொடா்ச்சியாக கோவளத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்க உள்ளனா். இதில் வெற்றி பெறும் அலைசறுக்கு வீரா்கள் வருகிற செப்டம்பா் மாதம் ஆசிய அளவில் நடைபெறும் அலைச்சறுக்கு போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.