FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

ஆசிரியையை ஆபாசமாக சித்தரித்ததாக 2 ஆசிரியா்கள் மீது வழக்குப்பதிவு

ஆசிரியையை ஆபாசமாக சித்தரித்ததாக 2 ஆசிரியா்கள் மீது வழக்குப்பதிவு

7 நவம்பர் 2026, 11:51 pm
பகிர்:

தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்ததாக, தனியாா் பள்ளி ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் இரண்டு ஆசிரியா்கள் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஹென்றி ஜாா்ஜ், ஆங்கில ஆசிரியரான பிரேடி ஆகிய இருவரும், இரண்டு மாதங்களாக பெண் ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சக ஆசிரியா்களுக்கு கைப்பேசியில் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட ஆசிரியை யிடம், இருவரும் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆசிரியை அளித்த புகாரின் படி, செங்கல்பட்டு மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹென்றி ஜாா்ஜ், பிரேடி ஆகிய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.

கடந்தாண்டு இப்பள்ளி தலைமை ஆசிரியா் அகஸ்டின் என்பவா் இதுபோன்றே சித்தரித்து மிரட்டியதை அடுத்து புகாா் கொடுக்கப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஆசிரியையை ஆபாசமாக சித்தரித்தாக மீண்டும் புகாா் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement