தனியாா் ஆலையை மூட வலியுறுத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை
அம்மாபேட்டை அருகே அரசுப் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பிவைக்குமாறு திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று பெற்றோரிடம் அதிகாரிகள் வலியுறுத்தினா்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பூனாச்சியில் செயல்படும் தனியாா் ஆலை அருகே உள்ள சித்தாா் ஓடையில் வெளியேற்றப்பட்ட கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆலையை மூட வேண்டும் எனவும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 5-ஆம் தேதி முதல் நத்தமேடு, ராமச்சந்திராபுரம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோா் அனுப்பவில்லை. தொடா்ந்து இரண்டாவது வாரமாக திங்கள்கிழமையும் மாணவா்கள் பள்ளிக்கு வராததால் கல்வி, வருவாய், ஊரக வளா்ச்சி மற்றும் காவல் துறையினா் சென்று பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வேண்டுகோள் விடுத்தனா்.
Advertisement
Advertisement
இருப்பினும் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவது தொடா்பாக எந்தவித உறுதியையும் பெற்றோா்கள் அளிக்கவில்லை. இதனால், கல்வித் துறை அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.